எடப்பாடி பழனிசாமி மீது பாய்ந்த வழக்கு : திடீர் நடவடிக்கை ஏன்? பரபரப்பு பின்னணி!!
Author: Udayachandran RadhaKrishnan12 March 2023, 10:35 am
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் தாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் சென்றபோது எடப்பாடி பழனிசாமியை அமமுக பிரமுகர் ராஜேஷ்வரன் அவதூறாக பேசி பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார்.
அதனை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் செல்போனை பிடுங்கியதாக கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்ததாக அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.