ஆட்டம் பாட்டம் என களைகட்டிய கொண்டாட்டம்… பட்டாசு வெடித்து கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்ற மக்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan1 January 2024, 8:16 am
ஆட்டம் பாட்டம் என களைகட்டிய கொண்டாட்டம்… பட்டாசு வெடித்து கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்ற மக்கள்!!
2023ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் நாடு முழுவதும் 2024-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர்.
டிசம்பர் மாதம் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழை பாதிப்புகள் இருந்து பொதுமக்கள் மீண்டு வந்து நள்ளிரவு உற்சாகமாக ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.
மெரினா, பெசன்ட் நகர், ஓஎம்ஆர் சாலையில் ஆர்ப்பரித்த மக்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி 2024ஆம் ஆண்டை வரவேற்றனர். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டியது.