சகோதரியை கைது செய்ய உத்தரவு போட்ட முதலமைச்சர்.. காவல்துறை எடுத்த ஆக்ஷன்… ஆந்திராவில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan22 February 2024, 7:57 pm
சகோதரியை கைது செய்ய உத்தரவு போட்ட முதலமைச்சர்.. காவல்துறை எடுத்த ஆக்ஷன்… ஆந்திராவில் பரபரப்பு!!
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ் சர்மிளா. அம்மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக கட்சியை தொடங்கினார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மேலிடம் சர்மிளாவை நியமித்தது. இந்நிலையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு தீர்க்க கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் சார்பில், சர்மிளா தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் இந்தப் போராட்டத்தை தடுக்க முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் இருந்து வெளியே வராதபடி வீட்டு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், வீட்டுக் காவலை தவிர்க்கும் முயற்சியாக சர்மிளா நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் படுத்து உறங்கினார்.
இதனைத் தொடர்ந்து, சர்மிளா ஆந்திர மாநில தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை விஜயவாடாவில் இன்று முன்னெடுத்தார். அப்போது போலீஸார் தடுக்க முயற்சித்த போதும் அதை மீறி முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றார். இதனால் போலீஸார் அவரை கைது செய்தனர். அப்போது ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.