முடிவுக்கு வந்த முதலமைச்சர் போட்டி… வரும் 20ஆம் தேதி பதவியேற்கும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2023, 12:42 pm

கர்நாடாகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.

இருவரையும் கட்சி மேலிடம் அழைத்து பேசியது 5 நாட்களாக பரபரப்பு நீடித்த நிலையில், இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

பெங்களூரில் இன்று இரவு 7.30 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ளது. பெங்களூரில் 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!