முதலமைச்சரின் பித்தலாட்டம் இங்கே எடுபடாது.. வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சூடான ஹெச்.ராஜா!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2023, 2:29 pm

முதலமைச்சர் ஸ்டாலினின் பித்தலாட்டங்கள் இங்கே எடுபடாது என பாஜகவின் மூத்த தலைவர் ஹெச் ராஜா விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது என்று கூறுவதே பித்தலாட்டம்.. ஏனென்றால், 19 ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது.

ஒரு நாளைக்கு ஒரு படுகொலை நடக்கிறது. போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. நம் வேலைகளை தமிழர்கள் பார்ப்பதற்கு தயாராக இல்லாத சூழலில் இருக்கையில், அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும்.

1969 காலகட்டத்தில் ஒரு தலைமுறையினருக்கு குடிப்பழக்கம் என்றால் என்னவென்பது தெரியாமல் இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கள்ளுக்கடையை தொடங்கி தமிழர்களை குடிகாரர்களாக ஆக்கியது கருணாநிதி தான்.

இப்போது அவரது மகன் ஸ்டாலினின் ஆட்சி மோசமான ஆட்சி. அவர்களின் பித்தலாட்டங்கள் இங்கே எடுபடாது. வடமாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வரவில்லை. இங்கே உள்ளவர்கள் தான் ரெயிலில் புக் பன்னி கூட்டி வந்தார்கள்.

ஆனால் சிலரோ, எங்களுக்கு ஓட்டு சேர்ப்பதற்காக இங்கே திரட்டி வருவதாக கூறுகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!