கண்ட கழிசடைகள் சீண்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் : நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2023, 1:59 pm

இஸ்லாமியர்களின் பொறுமையை கண்ட கழிசடைகள் சீண்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் : நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை!

நடிகரும், தயாரிப்பாளருமான ராஜ்கிரண்,80களில் உச்ச நட்சத்திரமாக இருந்த இவர் தற்போது சினிமாவில் தனக்கேற்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவர் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு தோன்றும் பொதுவான மதநல்லிணக்க கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். அதே போல தற்போதும் ஓர் கருத்தை பதிவிட்டுள்ளார். அது அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது.

அதில், இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல.

“இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம்” என்ற கொள்கையினால், பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்.

இந்தப்பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும். என யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் அதில் பதிவிட்டுள்ளார் நடிகர் ராஜ்கிரண். இவர் பதிவிட்டுள்ள கருத்து யாருக்கானது என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது .

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…
  • Close menu