போலீசாரை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற குற்றவாளி : கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டு..பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2023, 8:52 pm

போலீசாரை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற குற்றவாளி : துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்.. ஓசூரில் பரபரப்பு!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நாம் தார் உசேன் (34) இவர் மீது பல்வேறு வழிப்பறி உள்ளிட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. ஒசூர் பகுதிகளிலும் இவர் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்டுள்ளார் இது சம்பந்தமாக ஓசூர் அக்கோ போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு சென்று நாம் தார் உசேனை கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிடித்து வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவரை இன்று ஓசூர் திருப்பதி மெஜஸ்டிக் என்ற பகுதியில் திருட்டு நடந்த இடத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் அப்போது அவர் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசார் மூன்று பேரை சரமாரியாக தாக்கி தப்பித்து ஓட முயன்று உள்ளார் இதனை எடுத்து எஸ்ஐ வினோத் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டு மடக்கி பிடித்தார்.

குற்றவாளி தாக்கியதில் எஸ்ஐ வினோத் தலைமை காவலர் ராமசாமி முதல் நிலை காவலர் வெளியரசு ஆகியோருக்கு கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது அவர்கள் தற்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. அதேபோல வலது காலில் குண்டடிபட்ட நாம் தார் உசேன் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 411

    0

    0