மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan5 June 2023, 11:59 am
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.
தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் நேற்று வெப்பம் 18 இடங்களில் 100 டிகிரி ஃபேரன்ஷூட்டை தாண்டி பதிவாகியிருந்தது. இந்த நிலையில், வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், முதலமைச்சருடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி இருந்தார்.
எனவே, கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக உள்ள நிலையில், பள்ளி திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக 12-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு பதிலாக 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் இதுபோன்று ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0
0