திமுக அரசுக்கு நிர்வாகமே நடத்த தெரியல… மக்கள் துன்பத்திலும், வேதனையிலும்தான் உள்ளார்கள் : இபிஎஸ் குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan5 October 2022, 11:27 am
மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் மின் கட்டணம், சொத்து வரியை தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது என எடப்பாடி கூறினார் சென்னை, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வரும் வரை பொதுக்குழு கூட்ட மாட்டோம் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளோம்.
சென்னையில் மழைநீர் வடிக்கால் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது; அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டப்பணிகளை தான் தி.மு.க. தொடர்கிறது. எந்த புதிய, பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை
.அ.தி.மு.க. அரசின் திட்டங்களையே தி.மு.க. திறந்து வைத்து வருகிறது. மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தியுள்ளது .
மின் கட்டணம், சொத்து வரி உயர்வை மக்களால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்? தி.மு.க. ஆட்சியில் மக்கள் துன்பத்தையும் வேதனையும் தான் உள்ளார்கள் என கூறினார்.