தமிழக காவல்துறையை கைப்பாவை போல நடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு… சீண்டிய அண்ணாமலை!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2023, 9:12 pm

தமிழக காவல்துறையை கைப்பாவை போல நடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு… சீண்டிய அண்ணாமலை!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது குற்றசாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீதோ, அவரது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் மீதோ ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூட கூற முடியாது.

நேர்மை என்பதன் இலக்கணமாக ஒன்பதாண்டு கால மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பில்லாத அளவில் சட்டம் ஒழுங்கு உள்ளது.

ஆளுநர் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது. ஆனால், திமுக அரசு, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று காவல்துறையினரை வைத்துப் பேச வைக்கிறது. பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை. ஒட்டு மொத்த காவல்துறையும் உளவுத் துறையும் தோல்வியடைந்துள்ளது.

கம்பீரமான தமிழக காவல்துறையை, இன்று திமுக சிதைத்து வைத்திருக்கிறது. கடுமையான குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளைக் கண்டுகொள்ளாமல், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் தமிழக பாஜவினரைக் கைது செய்வதிலேயே முனைப்பாக இருக்கிறது.

நமது தமிழக காவல்துறையினரை, கைப்பாவை போல நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. தன் மகனுக்கு ஒரே ஆண்டில் அமைச்சராகப் பதவி உயர்வு கொடுத்த முதலமைச்சர், தனது துறையினரான காவல்துறையினரை இதுவரை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
அவர்களுக்குக் கொடுத்த ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.

காவல்துறையினர், ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரயோகத்துக்கு அஞ்சாமல், மக்களுக்காக பணி செய்ய வேண்டும். அதுதான் அவர்களது கடமை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 315

    0

    0