திமுக ஆட்சி கலைகிறது… நாள் குறிச்சாச்சு : பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா போட்ட குண்டு!!!
சட்டத்தை மதிக்காமல் தமிழக முதல்வரை சிலர் தவறாக வழிநடத்தும் நிலையில் தமிழக அரசு இன்னும் ஓரிரு வாரங்களில் கலைக்கப்படலாம் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, பழனி மலைக்கோவிலில் இந்து அல்லாதோர் நுழைவது என்பது சட்டவிரோதம் என்றும், தமிழக அரசுதான் மதசார்பற்றதே தவிர, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை என்பது மத சார்புடையதுதான் என்றும், இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து மதம் மற்றும் பண்பாட்டை பரப்பக்கூடிய செயலை செய்யவேண்டும்.
ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர் பாபு இந்து மதத்திற்கு எதிரான அனைத்து பணிகளையும் செய்துவருவதாகவும் தெரிவித்தார்.
உதாரணமாக பழனி அருகே கள்ளிமந்தையம் பகுதியில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் உள்ள பசுக்கள் பராமரிப்பின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது என்றும், பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களில் பல மாடுகளை கேரளாவிற்கு அடிமாட்டிற்கு அனுப்பப்புவதாக குற்றம் சாட்டினார்.
பசுக்களை இல்லாமல் செய்துவிட்டு 288ஏக்கரில் அமைந்துள்ள கோசாலை நிலத்தை சிப்காட் நிறுவனம் அமைக்க சேகர் பாபு முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அரசுக்கு சொந்தமானது தவிர, இந்து கோவில்கள் அரசுக்கு சொந்தமானது அல்ல என்றும், அது இந்து மக்களுக்கு சொந்தமானது என்றும் தெரிவித்தார்.
பழனி கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் வரலாம் என்றால், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த சம்பவம் போல வரும் காலங்களில் பழனி கோவிலில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது பெரிய பிரச்சனையாக இல்லை என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளது கேலிக்குரியது என்றும், பாமக தொண்டர் ஒருவர் வெட்டிக்கொலை செய்திருப்பது, 50 விசாரணைக்கைதி மரணம் ஆகியவை நடந்துள்ள நிலையில், முதல்வருக்கு தங்களது குடும்பத்தில் எப்போது சிபிஜ நுழையுமோ? என்ற அச்சமும், முதல்வர் குடும்பத்தில் துர்கா ஸ்டாலின் தவிர மற்ற அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்பதால், சிபிஜ தமிழகத்திற்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்திருப்பது ஆகியவை எல்லாம் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தெளிவாக விளக்குகிறது என்றும்,
திமுக ஆட்சி இன்னும் ஓரிரு வாரத்தில் ஆட்சி கலைக்கப்படலாம் என்றும் கூறினார்.
மிகப்பெரிய குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயல்வதும், 38 நாட்களாக ஒரு அமைச்சரை மருத்துவமனையில் வைத்துள்ளதும், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத அளவில் மறைத்து வைத்துள்ளது ஏன் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
சட்டத்தை மதிக்காமல் முதல்வரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள் என்றும் எச்.ராஜா தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னனி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணி , இந்து முன்னனி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.