திமுக, அதிமுகவுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்.. அலுவலகங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகளால் பரபரப்பு!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவை அடுத்த இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18-ந்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அன்று மாலை முதலே கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. மேலும் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

அதன்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும், மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவித்தனர்.

மேலும் தேர்தல் அலுவலகம் திறப்பு, பிரசாரம், வாகனங்கள், பொதுக்கூட்டத்துக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்து இருப்பதாக கூறினர். இதே போல் அ.தி.மு.க.வினர் மீதும் தி.மு.க.வினர் புகார் கூறி வந்தனர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அனுமதி இன்றி திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது தி.மு.க.வினர் 10 இடங்களிலும், அ.தி.மு.க.வினர் 4 இடங்களிலும் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்து இருப்பது தெரியவந்தது.

தி.மு.க. சார்பில் கே.எஸ்.நகர், கே.என்.கே. ரோடு, பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள வன்னியர் தெரு, வைராபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள பணிமனை, அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள பணிமனை, சிந்தன் நகர், வரதப்பா தெரு, பெரியார் நகர் அருகே சாந்தன் கரடு, கருங்கல்பாளையம், கள்ளுக்கடை மேடு ஆகிய இடங்களில் தி.மு.க தேர்தல் அலுவலகமும், திருவள்ளுவர் நகர், கல்யாண சுந்தரம் வீதியில் உள்ள அலுவலகம், ஆலமரத்து தெரு, மணல் மேடு ஆகிய இடங்களில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகமும் அனுமதி இன்றி செயல்படுவது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த அலுவலகங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை தேர்தல் அதிகாரிகள் கள்ளுக்கடை மேட்டில் திறக்கப்பட்டு இருந்த தி.மு.க. தேர்தல் பணிமனையை பூட்டி சீல் வைத்தனர்.

தொடர்ந்து ஒவ்வொரு இடமாக சென்று சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்த கட்சியினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவும் செய்து உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அட்டையை பார்த்து அரசியல் செய்பவர் அண்ணாமலை… காங்., எம்பி தாக்கு!

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து மதுரை மாநகர் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு சார்பில் அனைத்து…

24 minutes ago

கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…

17 hours ago

வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

19 hours ago

சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!

டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…

20 hours ago

முதலில் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. அடுத்து ED சொல்கிறது.. செந்தில் பாலாஜி அட்டாக் பேச்சு!

ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…

21 hours ago

நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!

நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…

21 hours ago

This website uses cookies.