அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு… ஆதாரங்கள் அடிப்படையில் நடக்கும் சோதனையால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2023, 9:27 am

தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐடி ரெய்டு குறித்து நேற்று பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது வீட்டில் சோதனை நடத்தவில்லை என்று கூறியிருந்த நிலையில், அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பு மற்றும் பல்வேறு கள்ளச்சாராய விற்பனை என அடுக்கடுக்கான புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…