வீட்டுக்குள் புகுந்து பெண் கூட்டுப்பாலியல்… இயற்கைக்கு மாறான பலாத்காரம் செய்த கும்பல் : கொடூர சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2022, 5:44 pm

மராட்டிய மாநிலம் மும்பையின் குர்லா பகுதியில் 42 வயது பெண் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த பெண் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, அதிகாலை அப்பெண்ணின் வீட்டிற்குள் 3 பேர் கொண்ட கும்பல் நுழைந்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பின்னர், அந்த கும்பல் இயற்கைக்கு மாறான பாலியல் செயலிலும் ஈடுபட்டுள்ளனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணின் பிறப்புறுப்பில் சிகிரெட் கொண்டு சூடு வைத்த அந்த கும்பல் அப்பெண்ணின் மார்பு, கைகளை கூர்மையான ஆயுதத்தை கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர்.

பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை அந்த கும்பல் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர், இது குறித்து போலீசில் புகார் அளித்தால் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவிடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர்.

ஆனால், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் தனக்கு நடந்த கொடூரம் குறித்து அருகில் வசிக்கும் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து போலீசில் இன்று புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். குற்றவாளிகள் 3 பேரும் அதே பகுதியில் வசிப்பர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாலையில் வீடு புகுந்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  • Second Wife Mounika talk About Balu Mahendra அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!