மக்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கும்பல் : கஞ்சா போதையில் வெறிச்செயல்… தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் குற்றங்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2022, 10:37 am

திருவள்ளூர் : மீஞ்சூர் அருகே ஊர் மக்களை ஓட ஓட அரிவாளால் விரட்டி வெட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே இடையன்சாவடி மற்றும் ஈச்சங்குழி கிராமத்தை சேர்ந்தவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈச்சங்குழி பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் ஆத்திரமடைந்து திட்டம் தீட்டினர்.

இடையன்சாவடி கிராமத்தில் கஞ்சா போதையில் நுழைந்த அவர்கள், அங்கிருந்த மக்களை ஓட ஓட விரட்டி வெட்டினார். 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் மக்களை விரட்டிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த சம்பவத்தால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மணலி போலீசார் விரைந்து சென்று குற்றவாளிகளை கைது செய்வோம் என வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ