விடுதியில் உள்ள சிறுமியை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்.. போட்டோஷூட் பெயரில் ஆசிரமத்தில் அக்கிரமம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2024, 10:37 am

ஆந்திர மாநிலம் ஏலூரில் சாமி தயானந்த சேவா ஆசிரமம் என்ற பெயரில் மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.

இங்கு கொரோனா காலத்தில் இருந்து ஆசிரம நிர்வாகிகள் சரியாக வருவதில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள சிந்தலபுடி மண்டலம் யர்ரகுண்டப்பள்ளியில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் காப்பாளராக பணி புரியும் சசிகுமார் ஆசிரிம நிர்வாகிகளிடம் பேசி தானே இதனை கவனித்து கொள்வதாக கூறி தனது மனைவி பனிஸ்ரீயை வார்டனாக நியமனம் செய்து கொண்டு கவனித்து வருகிறார்.

இங்கு ஏலூர் மாவட்டத்தை சேர்ந்த பல ஊர்களில் இருந்து வந்த 3 வகுப்பு முதல் டிகிரி வரை படிக்கும் மாணவிகள் இங்கு தங்கி பள்ளி, கல்லூரி சென்று வருகின்றனர்.
அவ்வாறு 50 பேர் இந்த விடுதியில் பதிவு செய்துள்ள நிலையில் 45 பேர் தங்கி வருகின்றனர்.

சசிகுமார் போட்டோ ஸ்டுடியோவும் நடத்தி வருகிறார். விடுதியில் தனது இரண்டாவது மனைவி வார்டனாகவும், மருமகளை பாதுகாவலராகவும் வைத்துக்கொண்டு மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டு வந்துள்ளார்.

மேலும் படிக்க: ஒரே ஒரு லட்டு ₹1.87 கோடிக்கு ஏலம்.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சசிகுமார் பாலியல் சீண்டலை தாங்கிக்கொள்ள முடியாத மூன்று சிறுமிகளும் இரவு இரண்டாவது நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சசிகுமார் மைனர் சிறுமிகளின் கைகளை கட்டி பாலியல் பலாத்காரம், செய்து தொடர்ந்து பாலியியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக கண்ணீர் விட்டு புகார் அளித்தனர்.

இம்மாதம் 15ம் தேதி, போட்டோஷூட் என்ற பெயரில், மைனர் சிறுமியை காரில் ஏற்றி, பாபட்லாவுக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, 16ம் தேதி, விடுதியில் இறக்கி விட்டதாக கூறினர்.

இதனையடுத்து ஏலூர் டிஎஸ்பி ஷ்ரவன்குமார் விடுதியில் ஆய்வு செய்தார். சிறுமிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்து, யார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என டிஎஸ்பி தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றார். இந்த விவகாரம் தெரிந்தவுடன் சசிகுமார் மற்றவர்கள் தற்போது தலைமறைவாகி இருப்பதாக கூறினார்.

இந்த சம்பவத்தை அடுத்து அங்கு வந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சக்கரவேணி நடந்த விவரங்களை மாணவிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆசிரமத்தின் சார்பில் நடத்தப்பட்டு வந்த விடுதியை அரசு பிற்படுத்தப்பட்ட நல விடுதியில் காப்பாளராக பணிபுரியும் சசிகுமார் என்பவர் அதனை நிர்வாகிப்பதாக கூறி செயல்பட்டு வந்தது.

எந்த வித அனுமதியும் இல்லாமல் செயல்பட்டு வந்த இந்த விடுதியில் 50 மாணவிகள் பதிவு செய்த நிலையில் 45 பேர் இங்கு உள்ளனர். இதில் மூன்றாம் வகுப்பு முதல் டிகிரி வரை படிக்கும் மாணவிகள் தங்கி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

சசிகுமார் இங்கு உள்ள மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 6 மணிக்கு பிறகு எந்தவித ஆண்களும் விடுதிக்கு வரக்கூடாது.

ஆனால் சசிகுமார் வந்து மாணவிகள் படிக்கும் பகுதியில் புகை பிடிப்பது உள்ளிட்ட பாலியியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து பாலியல் சுண்டலில் ஈடுபட்டுள்ளதாக 28 மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

எந்த விடுதியாக இருந்தாலும் சேவையாக செய்தாலும், ஆசிரமமாக இருந்தாலும் அரசு அனுமதியுடன் செயல்பட வேண்டும். ஆனால் இவர்கள் எந்தவித அனுமதி இல்லாமல் நிர்வகித்து வருகின்றார்கள்.

இந்த தகவல் தெரிந்தவுடன் சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமறைவாக உள்ளனர் சிசிடிவி கேமரா காட்சி உள்ள அறையும் பூட்டப்பட்டுள்ளது. விரைவில் அவை அனைத்தும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 368

    0

    0