தென்மாவட்ட மக்களை மீட்பதில் அரசு அதிக கவனம்.. களத்தில் 10 அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் : முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2023, 8:54 pm

தென்மாவட்ட மக்களை மீட்பதில் அரசு அதிக கவனம்.. களத்தில் 10 அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் : முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அதில் கூறியதாவது ” பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர்.

தலைமைச் செயலாளர் அவர்களும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது” என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!
  • Close menu