திமுகவினரை விட ஆளுநர் மோசமாக நடந்துகொண்டார் : டங்க் ஸ்லிப்பாகிய அண்ணாமலை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2024, 6:20 pm

திமுகவினரை விட ஆளுநர் மோசமாக நடந்துகொண்டார் : டங்க் ஸ்லிப்பாகிய அண்ணாமலை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நேற்று இந்த ஆண்டினுடைய முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால் திமுக தயாரித்த உரையை படிக்க மறுத்து, தேசிய கீதம் இசைக்கும் முன்னரே அவையில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி வெளியேறினார். இது பெரும் சர்ச்சையானது.

ஆளுநரை மாண்புடன் நடத்த வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலினும் உத்தரவிட்டு இருக்கிறார். இதையடுத்து ஆளுநர் உரையை நான் வாசித்தேன். சட்டசபையில் தேசிய கீதம் ஆளுநர் உரைக்கு பின் பாடப்படும் என்பதே மரபு. அதை மாற்றும்படி ஆளுநர் ரவி கூறினார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர். என் ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சபாநாயகர் சரியாக நடந்து கொள்ளாததால் ஆளுநர் அவையில் இருந்து நேற்று வெளியேறினார் என்று கூறுவதற்கு பதிலாக “ஆளுநர்” மோசமாக நடந்து கொண்டார்.. அதனால் ஆளுநர் வெளிநடப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது சபாநாயகர் என்று சொல்வதற்கு பதிலாக டங்க் ஸ்லிப் ஆகி ஆளுநர் மீதே அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

  • Simran Slams Actress Talked About Aunty Roles Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?