தென்மாநிலங்களில் தமிழக காவல்துறைக்கு உயரிய கவுரவம் : ஜனாதிபதி சிறப்பு கொடியை முதல்வரிடம் வழங்கிய துணை ஜனாதிபதி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2022, 10:46 am

தமிழக போலீஸ் துறைக்கு மிக உயரிய ஜனாதிபதி சிறப்பு கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது.

தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் தமிழகம் தான். தமிழக போலீஸ் துறைக்கு கவுரவமிக்க ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்று வருகிறது இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

துணை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு தமிழக போலீசார் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக போலீஸ் துறைக்கு ஜனாதிபதி கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். ஜனாதிபதியின் சிறப்பு கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!