அதிரடிப்படையினர் நடத்திய வேட்டை..வசமாக சிக்கிய செம்மரக்கடத்தல் கும்பல்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2024, 7:21 pm

திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை எஸ்.பி. சக்ரவர்த்திக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிக் ஆர்.ஐ. கிருபானந்தா குழுவினர் அன்னமையா மாவட்டம் ராஜாம்பேட்டை அருகே உள்ள பாலபள்ளி சரகத்தில் துனி கொண்டா வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, கண்டெய்னர் லாரி, இன்னோவா கார், பைக்குடன் சிலர் இருப்பதை பார்த்து அவர்களை சுற்றி வளைத்தனர்.

போலீசாரை கண்டதும் சிலர் தப்பி ஓடிய நிலையில் 4 பேரை பிடித்து லாரியை சோதனை செய்தபோது செம்மரம் வெளியே தெரியாமல் இருக்க அட்டை பெட்டிகளில் வேளாண் பொருட்கள் வைத்து அதன் பின்னாள் செம்மரம் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ₹ 80,000 ஆயிரம் , 16 செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட ரயில்வே கோடுரு மண்டலத்தைச் சேர்ந்த வெங்கடா ரெட்டி 31, ஸ்ரீனிவாச ரெட்டி 37, நாகேந்திரபாபு 33, ஒபுலவாரிபள்ளே மண்டலம் அரிகலா கிராமத்தை சேர்ந்த மகேந்திரா 26 ஆகியோரை திருப்பதி அதிரடிப்படை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 194

    0

    0