அந்த 10 நாள்.. தேதியுடன் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு : தயாராகும் அதிமுகவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2024, 6:51 pm

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றனது.

இதனால் தோல்வியில் இருந்து மீண்டு வர அதிமுக பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது.தேர்தல் தோல்வி குறித்து வரும் 10ம் தேதி முதல் ஈபிஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதன்படி, வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொகுதி வாரியாக இபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.

10ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 11ம் தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாளும் 2 முதல் 3 தொகுதி நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்களிடம் தோல்விக்கான காரணங்களை கேட்டறியவுள்ளார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 189

    0

    0