பாக்., எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி…கவிழ்ந்தது இம்ரான்கான் அரசு: புதிய பிரதமராகிறார் ஷபாஸ் ஷெரீப்?

Author: Rajesh
10 April 2022, 8:49 am

இஸ்லாமாபாத்: நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளதால், இம்ரான்கான் அரசு கலைக்கப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறுவதை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தார்.

ஆனால், நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது எனவும் இம்ரான்கான் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் குறைந்தது 172 உறுப்பினர்கள் இம்ரான்கானுக்கு ஆதரவாக வாக்களித்தால் அவரின் ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். இந்நிலையில், இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன் மூலம் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு கவிழ்ந்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்தும் இம்ரான்கான் நீக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் அரசியலில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்த முதல் பாக்., பிரதமரானார் இம்ரான்கான்

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1247

    0

    0