தெருநாய்கள் கடித்து குதறி கவ்வி இழுத்து சென்ற சம்பவம்.. ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி!
Author: Udayachandran RadhaKrishnan17 July 2024, 10:38 am
தெருநாய்கள் கடித்து ஒன்றரை வயது குழந்தையை கவ்வி இழுத்து சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர் பகுதியில் ஜவஹர் நகர் என்ற பெயரில் ஆன குடியிருப்பு பகுதி உள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த 18 மாத வயது சிறுவன் விகான் நேற்று இரவு வீட்டின் முன் விளையாண்டு கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த தெரு நாய்கள் விகான் மீது பாய்ந்து அவனுடைய தலை முடியை கவ்வி இழுத்துச் சென்று கடித்து குதறிதால் படுகாயம் அடைந்தான்.
அந்த சிறுவன் முகம் மற்றும் உடல்பாகங்கள் அனைத்தையும் தெருநாய்கள் கடித்து குதறிய நிலையில் அவருடைய தலை முடி அந்தப் பகுதியில் சிதறி கிடந்தது.
இதனை கவனித்த அந்த பகுதி பொது மக்கள் உடனடியாக சிறுவனின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.
பெற்றோர் சிறுவன் விகானை இரவோடு இரவாக ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவன் நேற்று இரவு பரிதாபமாக மரணமடைந்தான்.
இதனால் சிறுவனின் பெற்றோர் மற்றும் ஜவகர்நகர் பகுதி பொதுமக்கள் ஆகியோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்..
சில நாட்களுக்கு முன் ஐதராபாத் அம்பர் பேட் பகுதியில் இரண்டு வயது சிறுவன் ஒருவனை தெரு நாய்கள் கடித்து குதறிகாயப்படுத்திய சம்பவத்தை மறந்து போவதற்குள் விகான் மீது தெருநாய்கள் தாக்குதல் நடத்தி அவன் இறந்தது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் மாநகர சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் கடும் ஆவேசத்தில் உள்ளனர்.