‘தி கேரளா ஸ்டோரி’… அடிப்படை உரிமையை பறிக்க முடியாது ; மாநில அரசின் முடிவுக்கு வேட்டு வைத்த உச்சநீதிமன்றம்!!!

Author: Babu Lakshmanan
18 May 2023, 4:35 pm

தி கேரள ஸ்டோரி திரைப்படத்திற்கு மாநில அரசு விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் இந்துப் பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்து, தீவிரவாத அமைப்புகளுடன் சேர்த்து விடுவதாக கதை அமைந்துள்ளது. கேரளாவில் நடந்த உண்மை கதை என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்த படத்திற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிட தடை விதிப்பதாக அந்த மாநில முதலமைச்சராக மம்தா பானர்ஜி அறிவித்தார். இந்த படம் வெறுப்புணர்வையும், வன்முறையையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் படத்தை தடை செய்வதாக அவர் கூறினார்.

இதனை எதிர்த்து படத்தின் தயாரிப்பு குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், திரைப்படத்திற்கு சிபிஎப்சி சான்றிதழ் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், திரைப்படத்துக்கான தடையை விதிக்க சட்டம் ஒழுங்கை மாநில அரசு காரணமாக காட்ட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், தி கேரள ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு விதித்த தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சிலர் ஒரு விஷயத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக அதனை தடை செய்ய முடியாது என்றும், பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம் எக் கூறிய நீதிபதிகள், அதை விட்டுவிட்டு அடிப்படை உரிமையை எப்படி பறிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழகத்தில் தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடை செய்யக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் படத்திற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!
  • Close menu