ஆந்திராவில் இருந்து பாய்ந்த கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வந்தது : வரவேற்க அமைச்சர்கள் வராததால் பொதுப்பணித்துறை காத்திருப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan8 May 2022, 12:31 pm
சென்னை மக்களின் குடிநீர் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் ஜீரோ பாய்ன்டை வந்தடைந்தது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக தமிழக பொதுப்பணித் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 2 தினங்களுக்கு முன்னர் 500 கனஅடி வினாடிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீரானது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாமரை குப்பம்
ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது.
கிருஷ்ணா நதிநீர் கண்டலேறு அணையில் இருந்து 152 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாய் கால்வாயில் கடந்து ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது. 11 மணிக்கு கிருஷ்ணா நதி நீர் வந்தடையும் என எதிர்பார்த்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்கூட்டியே தண்ணீர் வந்ததால் கால்வாய் அடைப்புகளை சரிந்து விழுந்த கற்களை ஊழியர்களை கொண்டு உடனடியாக அகற்றும் பணி மேற்கொண்டு வருகின்றனர் .
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்க சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் வராததால் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. .