விரைவில் ஊழல் பட்டியல் தயார்… தமிழிசை அக்கா ரெடியா இருங்க : பாஜகவுக்கு பகீர் கிளப்பும் திருச்சி சூர்யா!
Author: Udayachandran RadhaKrishnan23 June 2024, 7:17 pm
புதுவை துணை நிலை ஆளுநராகவும் தெலுங்கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசையை விமர்சித்து கடுமையாக பதிவை போட்டியிருந்தார். இதனால் திருச்சி சூர்யா தற்போது அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்.
கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகும் அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டுதான் தமிழக பாஜகவில் இணைந்தேன். என் மீது எடுக்கப்பட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு எந்த வருத்தமும் இல்லை. அண்ணன் அண்ணாமலையை விமர்சித்ததால் நான் பதில் அளித்தேன். இனியும் பாஜகவில் பயணிக்க எனக்கு எண்ணம் இல்லை என தெரிவித்திருந்தார்.
மணல் மாஃபியாக்களிடம் எந்தெந்த பாஜக பிரமுகர்கள் ஆட்டையை போட்டார்கள் என்பது குறித்து விரைவில் அம்பலப்படுத்துவேன் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஊழல் கறை படியாத தமிழிசையையும் ஊழலை பட்டியலிடுவேன் என திருச்சி சூர்யா தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் எந்த பட்டியலையாவது வெளியிட்டால்தான் தமிழகத்தில் புயலை கிளப்புமா இல்லை புஸ்வாணமாகிவிடுமா என்பது தெரியவரும்.