இபிஎஸ் அணிக்கு தாவிய முக்கிய பிரமுகர்.. அதிர்ச்சியில் ஓபிஎஸ் : தேர்தலால் வந்த வினை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2023, 12:33 pm

ஈரோடு மாநகர மாணவரணி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முருகானந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார்.

அவருக்கு ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. எனவே மாவட்ட செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக களமிறங்குவார் என கூறப்பட்டது.

முருகானந்ததும் அந்த ஆசையில் தான் இருந்தார். பின்னர் வேட்பாளர் செந்தில் முருகன் என அறிவிக்கப்பட்டதால் முருகானந்தம் அதிருப்தியடைந்தார்.

ஆனால் அதிமுகவில் ஏற்பட்ட மோதல், நீதிமன்றம் வரை எதிரொலித்தது. இதையடுத்து இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து வேட்பாளரை முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இபிஎஸ் தேர்வு செய்த வேட்பாளர் தென்னரசுவை ஆதரிப்பதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் ஒபிஎஸ் அணியில் இருந்த முருகானந்தம் தற்போது இபிஎஸ் அணியில் இணைந்துள்ளார்.

ஈரோட்டில் பரப்புரையில் ஈடுபட வந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி