சக மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து காதலுனுக்கு அனுப்பிய விவகாரம் : பல்கலை.க்கு 24ம் தேதி வரை விடுமுறை.. 3 பேர் கைது!!

பஞ்சாப் பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவிகள், தங்களை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறி, பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

வீடியோ எடுத்த மாணவி கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகார் பல்கலைக்கழகம் உள்ளது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவை தாண்டிய பிறகு, மாணவிகள் திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

அந்த பல்கலைக்கழக மாணவிகளை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக தகவல் பரவியது. அதை கேள்விப்பட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல்கலைக்கழகம் அளித்த புகாரின்பேரில், இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில், அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி, தனது ஆபாச வீடியோவை இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியதும், அதை அந்த வாலிபர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதும் தெரிய வந்தது. அந்த வாலிபரின் பங்கு பற்றி விசாரணை நடந்து வருகிறது.

ஆனால், ஒரு மாணவியை தவிர, பிற மாணவிகள் ஆபாசமாக வீடியோ எடுக்கப்படவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் நல இயக்குனர் அரவிந்த் சிங் காங் மறுத்தார். பஞ்சாப் மாநில பெண்கள் ஆணைய தலைவி மனிஷா குலாதி, பல்கலைக்கழக வளாகத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோரின் கவலை எனக்கு புரிகிறது. போலீஸ் விசாரணை நடக்கிறது. அந்த மாணவி, ஏன் வீடியோ எடுத்தார் என்பது ஆழ்ந்து விசாரிக்கப்பட வேண்டும். அவர் வீடியோ எடுத்தாரா, இல்லையா என்பது விசாரணையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், இவ்விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக பெண்கள் விடுதி வார்டன் ராஜ்விந்தர் கவுரை சஸ்பெண்ட் செய்தது.

தொடர்ந்து பல்கலைக்கழகமும் சனிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளது. வைரல் வீடியோவில் காணப்பட்ட விடுதி வார்டன், இந்த விஷயத்தைப் பற்றி உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியபோது அவர் மாணவியை திட்டியதாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட பெண் மாணவியின் தொலைபேசியில் நான்கு வீடியோக்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் இவை அனைத்தும் இந்த பெண்ணின் காதலனுக்கு அனுப்பியவை என்று மொஹாலியின் உயர் போலீஸ் அதிகாரி நவ்ரீத் சிங் விர்க் கூறினார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுவது போல் பல்கலைக்கழகத்தில் தற்கொலை முயற்சி எதுவும் நடக்கவில்லை.

விடுதி குளியலறையில் மற்ற பெண்களின் ஆபாச வீடியோக்களை அந்த மாணவி எடுத்ததற்கான ஆதாரம் இல்லை என்ற காவல்துறையின் கருத்துக்களை சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் ஏற்க மறுத்துவிட்டனர். குற்றம்சாட்டப்பட்ட மானவி சிம்லாவில் வசிக்கிறார் அவரையும் அவரது காதலரையும் போலீசார் கைது செய்தனர்.

23 வயதான காதலர் மேத்தா ஒரு டிராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார். பேக்கரி ஒன்றில் பணிபுரியும் இரண்டாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…

கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

50 minutes ago

96 படம் போல நடந்த மீட்டிங்.. மனைவிக்கு துளிர் விட்ட கள்ளக்காதல் : 3 உயிர்களை பறித்த உல்லாசக் காதல்!

தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…

59 minutes ago

மாணவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பாதிரியார்.. பள்ளி விடுதியில் நடந்த பயங்கரம்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…

1 hour ago

வடிவேலுகிட்ட கோடி ரூபாய் கொடுத்தேன், ஆனால் அவரு? ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்…

புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…

3 hours ago

ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு? ஓடிடிக்கு தயாரானது லால் சலாம்!

சுமாரான வரவேற்பு ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான…

4 hours ago

This website uses cookies.