சாதி பற்றிய சர்ச்சை கேள்வி அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சை : மீண்டும் சேலம் பெரியார் பல்கலை.,யில் அண்ணாதுரை பெயரில் பிழை!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2022, 8:41 am

பெரியார் பல்கலை தேர்வில், எது தாழ்த்தப்பட்ட ஜாதி என்ற வினா எழுப்பிய சர்ச்சை அடங்குவதற்குள், அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்ஏ வரலாறு பாடத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்கான கேள்வித்தாளில், ‘தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய கேள்வி விவகாரம் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்தது. மேலும் இது குறித்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும் என்று தமிழக உயர் கல்வித் துறை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் பெரியார் பல்கலை.,யில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயரை, ‘அண்ணாதுளை’ என, பிழையுடன் வினாத்தாள் வெளியாகியுள்ளது.

பி.ஏ., அரசியல் பொருளாதார பாடத் தேர்வில், ‘தமிழ்நாட்டில் அண்ணாதுளை ஆட்சியின் சாதனைகள் பற்றி விவாதிக்க’ என, பிழையுடன் வினாத்தாள் வெளியாகி உள்ளது.

ஈ.வெ.ரா., பெயரில் உள்ள பல்கலையில், அவரது சீடரின் பெயர் எழுத்துப்பிழையுடன் அமைத்துள்ளது, பல தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 823

    0

    0