தமிழக போலீசை விரட்டி விரட்டி தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்… வெட்டிகித் தலைகுனிய வேண்டும்… சீறும் சீமான்!!
தமிழ்நாட்டில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கி பல்வேறு வேலைகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அம்பத்தூர் பகுதுயில் தனியார் தொழிற்சாலையில் வட மாநில இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த புகார் சம்பந்தமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் நிலை காவலர் ரகுபதி என்பவர் அங்கு விசாரிக்க சென்றார். அப்போது அவர்கள் காவல்துறையினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காவலர் ரகுபதி காயமடைந்தார்.
இரு தரப்பினரிடையே மோதல் குறித்து போலீசார் 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். ரோஷன் குமார், பிளாக் தாஸ், பின்டு, ராம்ஜித், சுராஜ் குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இச்சம்பம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் கொதித்தெழுந்துள்ளனர். வேலை செய்ய வந்த இடத்தில் போலீசாரையே தாக்கும் செயலை கண்டித்துள்ளனர்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அம்பத்தூரில் வடமாநிலத் தொழிலாளர்களிடையே ஆயுத பூஜை அன்று மதுபோதையில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற தமிழ்நாடு காவலர்களை வட மாநிலத்தவர் கட்டையாலும், கற்களாலும் கடுமையாகத் தாக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
கடந்த காலத்தில் உலகின் இரண்டாவது தலைச்சிறந்த காவல்துறை என்ற பெயர்பெற்ற தமிழ்நாட்டு காவல்துறை இன்றைக்கு வட மாநிலத் தொழிலாளர்களால் விரட்டி விரட்டி தாக்கப்படும் அளவிற்கு தரம் குறைந்து போயிருப்பது வெட்கக்கேடானது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நாளுக்குநாள் அதிகரித்த அத்தகைய குற்றச் செயல்களைத் தடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கே, தற்போது காவல்துறையினரையே கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைய முக்கியக் காரணமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு இதற்கு மேலாவது விழித்துக்கொண்டு, தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வெளி மாநிலத்தவரின் எண்ணிக்கை, பணி புரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச் சீட்டு (ILP – Inner Line Permit) முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் அம்பத்தூரில் தமிழக காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத்தவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை் பெற்றுத் தருவதோடு, அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.