சிங்காரித்து மனையில் குந்த வைத்து மூக்கறுக்கற கதை : புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 May 2023, 10:56 am

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதற்கான கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில் வரும் 28-ஆம் தேதி நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். நாட்டின் தலைவர் என்ற முறையில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அதை திறந்து வைப்பதுதான் சரியாக இருக்கும் என எதிர்கட்சிகள் தெரிவித்தது.

மேலும் சவார்கர் பிறந்த தினத்தன்று கட்டிடம் திறக்கப்படவுள்ளதற்கும் எதிப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் தற்போது திமுகவும் புறக்கணித்துள்ளது. திமுக எம்பி திருச்சி சிவா இதை அறிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி