விமானத்தில் பயணித்த போது மயங்கி விழுந்த பயணி… முதலுதவி அளித்த ஆளுநர் தமிழிசை : ஒரு மணி நேரம் நடந்த போராட்டம்.. குவியும் பாராட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 ஜூலை 2022, 8:32 மணி
DR Tamilisai - Updatenews360
Quick Share

டில்லியில் இருந்து ஐதராபாத் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் மயக்கமடைந்த நிலையில் விமானத்திலேயே பயணம் செய்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் முதலுதவி சிகிச்சை அளித்தது பாராட்டுகளை குவித்து வருகிறது.

டெல்லியில் இருந்து தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்திற்கு தனியார் விமானம் சென்றது. அதில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசையும் பயணித்தார்.

நடுவானில் விமானம் பயணம் செய்து கொண்டிருந்த போது, காலை 4 மணியவில், விமான பணிப்பெண் ஒருவர், ‘விமானத்தில் டாக்டர் யாரேனும் உள்ளீர்களா ? பயணி ஒருவர் மயங்கிய நிலையில் உள்ளார்’ எனக்கூறினார்.

உடனடியாக தமிழிசை எழுந்து, அந்த பயணி அருகே சென்றார். அவர், வியர்த்த நிலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். சற்றும் தாமதிக்காமல் அவருக்கு சிகிச்சை அளித்த தமிழிசை, அந்த பயணி கண் விழிக்கும் வரை அருகில் அமர்ந்து பயணித்தார். அந்த பயணி உடல்நிலை சற்று தேறி கண் விழித்ததும் மற்ற பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மயக்கமடைந்த அந்த பயணி, ஐதராபாத் சென்றதும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மயங்கியது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்த விமான பணிப்பெண்ணுக்கு தமிழிசை பாராட்டு தெரிவித்தார்.

முதலுதவி சிகிச்சை அளித்த தமிழிசைக்கு பயணிகள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். தமிழிசை முதலுதவி அளித்ததை படம் பிடித்த சக பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்தவர்கள், தமிழிசையை பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர். தமிழிசை டாக்டருக்கு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 659

    0

    0