கோழியை உயிருடன் தோல் உரித்து துண்டு துண்டாக வெட்டி துன்புறுத்தி இறைச்சியாக்கிய இறைச்சி வெட்டுபவரின் வீடியோ வைரலான நிலையில் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள செங்கவிளையைச் சேர்ந்த வாலிபர் மனு. கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் இவர் கோழியை உயிருடன் உரிக்கும் கொடூர வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செங்கவிளையைச் சேர்ந்த மனு என்ற இந்த இளைஞன், கோழியின் தோலை உரித்து உயிருடன் கொடூரமாக துடிக்க துடிக்க வெட்டி இறைச்சி ஆக்கும் கொடுமையான செயல். இந்த வீடியோ தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக – கேரள எல்லையில் உள்ள கொல்லங்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இறைச்சிக் கடையில் செங்கவிளையைச் சேர்ந்த மனு என்பவர் கசாப்பு வேலை பார்த்து வருகிறார்.
இந்த கடையில் இறைச்சி வாங்க வந்த ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்த வீடியோ காட்சியில் எந்த மனவருத்தமும் இல்லாமல் மிகவும் குரூரமாகச் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் இந்தக் கொடூரத்தைச் செய்திருக்கிறான் அந்த இளைஞன்.
இறைச்சிக் கடைகளில் கோழியின் தலையை துண்டித்து உயிர் போன பிறகு தோல் உரிக்கப்பட்டு இறைச்சி துண்டுகளாக வெட்டப்படுவது வழக்கம்.
ஆனால் அந்த வாலிபர் இரக்கமே இல்லாமல் மொபைல் போனை பார்த்து சிரித்து கொண்டே இந்த கொடூரத்தை காட்டியுள்ளார்.
உயிருடன் தோலை உரித்து துடிக்க துடிக்க துண்டு துண்டாக வெட்டும் போது கோழி கதறி அழுவதும், துடி துடிப்பதும் இந்த காட்சிகளில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்த இளைஞருக்கு எதிராக கடும் கண்டனங்கள் பரவி வருகின்றன.
அவர் மீது கால்நடை பராமரிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
….
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.