தலைநகரை திகைக்க வைத்த மிக்ஜாம்.. டெல்லியில் இருந்து வந்த போன் கால்.. முதலமைச்சர் கேட்ட கோரிக்கை : அமித்ஷா கொடுத்த நம்பிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2023, 6:21 pm

தலைநகரை திகைக்க வைத்த மிக்ஜாம்.. டெல்லியில் இருந்து வந்த போன் கால்.. முதலமைச்சர் கேட்ட கோரிக்கை : அமித்ஷா கொடுத்த நம்பிக்கை!!

வங்கக்கடலில் நிலைகொண்டு உள்ள மிக்ஜாம் புயலின் தாக்கம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழந்து மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். வீடுகள், கட்டிடங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. போலீசார், மீட்புக் குழுவினர் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளையும், மீட்புப் பணிகளையும் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிக்கைல், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள மிக்ஜாம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்தும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இன்று (4.12.2023), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திடுமாறும் கேட்டுக் கொண்டார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 295

    0

    0