14 உயிர்களை பலி வாங்கிய விமானம்… அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய சோகம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2023, 1:53 pm

14 உயிர்களை பலி வாங்கிய விமானம்… அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய சோகம்!!!

பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்துநொறுங்கியதில் அதில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்தத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, பார்சிலோஸ் நகரில் கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், அமேசான் மழைக்காடுகளில் தரையிறங்க முயன்ற விமானம், ரன்வேயை கடந்து சென்று அருகில் இருந்த வனப்பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண ஞாயிற்றுக்கிழமை மாநில தலைநகருக்கு கொண்டு செல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், முதற்கட்ட விசாரணையில், பயணிகள் அனைவரும் விளையாட்டு மீன்பிடிப்பதற்காக இப்பகுதிக்கு பயணித்த பிரேசிலியர்கள் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

அமேசான் துணை நதியான ரியோ நீக்ரோவில் அமைந்துள்ள பார்சிலோஸ் பல தேசிய பூங்காக்கள் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளால் எல்லையாக உள்ளது. அங்கு பலரும் மின் பிடித்து விளையாடுவதற்காக செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி