என் தம்பி மேல கை வச்சா கொளுத்திக்குவ : சாலையோர வியாபாரியை அரைநிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற போலீஸ்.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2022, 10:00 pm

சென்னை : சாலையோர சிறு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போலீசார் வியாபாரியை அரைநிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு பூ பழம் காய்கறி சந்தைகளை ஒட்டிய 60 அடி சாலையில் இரு புறமும் ஆக்கிரமிப்பு செய்துள்ள 500 க்கும் மேற்பட்ட சாலையோர சிறு கடைகளை காவல்துறை உதவியுடன் சிஎம்ஏ அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

இதற்காக சாலையோர கடை வியாபாரிகளை அடித்து இழுத்துச்செல்லும் நிகழ்வுகளும், கடையில் வியாபாரிகள் அடுக்கி வைத்துள்ள பொருட்களை குப்பை வண்டியில் ஏற்றும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோயம்பேடு ஒழுங்குமுறை விற்பனைகூட அதிகாரி CAO S.சாந்தி தலைமையிலான அதிகாரிகள் சட்ட விரோத கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, கோயம்பேடு மார்கெட் அருகில் அமைந்திருக்கும் சாலையோர கடைகளை அகற்றியும், வியாபாரிகளை அடித்து, குண்டுகட்டாக தூக்கியும் சென்றனர்.

இச்சம்பவத்தின் வீடியோ பதிவு இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவில், கணேசன் என்ற வியாபாரியைப் போலீசார் அடித்து இழுத்து செல்கின்றனர். அவரை அழைத்துச் செல்லும்போது ஏற்பட்ட இழுப்பறியில் கணேசனின் சட்டை, பேண்ட் எல்லாம் கிழிந்து அரை நிர்வாணமாக்கப்படுகிறார்.

இதற்கிடையில் கணேசனைப் போலீஸார் அடித்து இழுத்து வரும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. வலியில் மானம் போகும் தருவாயில் கணேசன் கதறுவதை சற்றும் பொருட்படுத்தாமல் போலீசார் அவரை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.

மேலும், கடையைக் காலி செய்துவிடுகிறோம், தனது சகோதரர் கணேசனை அடிக்காதீர்கள் என்று கதறியபடி காவல்துறையிடம் கணேசனின் சகோதரி துர்கா கேட்கும் நிலையில், சகோதரி துர்காவையும் குண்டுகட்டாக போலீசார் தூக்கிச் செல்கின்றனர்.

சாலையோரத்தில் உள்ள கடைகளை அகற்ற போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவம் சாமானியரிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!