நீட் விலக்கு மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் போதும்.. ஆளுநர் போஸ்ட்டேன் மட்டும்தான் : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2023, 11:40 am
சென்னை மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நீட் தேர்வை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நீட் தேர்வுக்கு எதிராகவே திமுக இருந்து வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக ஆளுங்கட்சியே அறப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அதிமுக கூட ஆதரித்தது.
நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டியது கவர்னர் அல்ல; ஜனாதிபதி தான். மசோதாவை வாங்கி ஜனாதிபதிக்கு அனுப்பும் போஸ்ட்மேன் தான் கவர்னர். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது.. உறங்காது.. அறப்போராட்டம் தொடரும். என்று கூறினார்.