வாரத் தொடக்கமே இப்படியா.. தங்கம் விலை அதிரடி உயர்வு : இன்றைய விலை நிலவரம்!
Author: Udayachandran RadhaKrishnan27 May 2024, 11:27 am
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது.
அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (27-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. நேற்று ரூ.53,240க்கு விற்ற ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.53,760க்கு விற்பனை ஆகிறது.
மேலும் படிக்க: ஆந்திராவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து : திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் பலியான சோகம்!
கிராம் ஒன்று ரூ.65 உயர்ந்து, ரூ.6,720க்கு விற்பனை ஆகிறது. 24 கேரட் சொக்கத் தங்கத்தின் விலை ரூ.7,190ஆக உள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.97.50க்கு விற்பனை ஆகிறது.