டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.80 வரை உயர்வு: இன்று முதல் அமல்…அரசுக்கு எத்தனை கோடி வருவாய் தெரியுமா?

Author: Rajesh
7 March 2022, 10:43 am

டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களின் விலையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்துள்ளது மதுப்பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொதுவாக பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாக காலை 10 மணி முதல் இரவு 8மணி வரை மது விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் பழைய நேரப்படி விற்பனை நடைபெறுகிறது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக கடந்த 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் மதுவிலக்கு ஆயதீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.10, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.20, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.40, புல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும் விலை உயர்த்தபட்டுள்ளது

பீர் வகைகளுக்கு ரூ.10 விலை உயர்ந்த பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஒரு நாளைக்கு மதுவகைகள் மூலம் ரூ 10.35கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது.பீர் வகைகள் மூலம் ஒரு நாளைக்கு 1.76 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 4396 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது என்று தெரியவருகிறது.

இன்று காலை 12 மணியளவில் கடை திறந்தவுடன் புதிய விலை பட்டியல் படி விற்பனை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • famous Actress Kept her Husband in his Control ஒரு மாதமாகியும் ஓயாத ஹினிமூன்… கணவரை கட்டுப்பாட்டில் வைத்த பிரபல நடிகை!
  • Views: - 1459

    0

    0