இது கனவா இல்ல நிஜமா.. தோனியை விமர்சித்த அதே வாய் : திடீரென புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் வீரர்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 November 2022, 8:19 pm

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி தொடரைவிட்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது. கடைசியாக 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் அடுத்த கோப்பைக்கான காத்திருப்பு தொடர்கிறது.

இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் தோனி 2007ல் டி20 உலக கோப்பை, 2011ல் ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 கோப்பைகளையும் வென்று கொடுத்தார். 3 ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர் தோனி.

தோனிக்கு பிறகு இந்த 3 ஐசிசி கோப்பையில் ஒரு கோப்பையை கூட இந்திய அணி வெல்லவில்லை. 2019 ஒருநாள் உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறிய இந்திய அணி, 2021 டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்குகூட தகுதிபெறவில்லை, இந்த டி20 உலக கோப்பையிலும் அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது.

தோனிக்கு அடுத்து வேற கேப்டனின் தலைமையில் இந்திய அணி ஒரு உலக கோப்பையை வெல்வதற்கே திணறுகிறது. கோலி, ரோஹித் ஆகியோர் சிறந்த வீரர்களாக இருந்தாலும், ஒரு கேப்டனாக ஒரு ஐசிசி கோப்பையை வெல்வதற்கே போராடுகின்றனர். ஆனால் தோனி 3 ஐசிசி கோப்பைகளையும் வென்று அபார சாதனை படைத்தார்.

டி20 உலக கோப்பையில் இங்கிலாந்திடம் அரையிறுதியில் தோற்று இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை மீண்டுமொரு முறை இழந்துவிட்ட நிலையில், தோனியின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், ரோஹித் சர்மாவை விட அதிக இரட்டை சதங்களை வேறு வீரர் எதிர்காலத்தில் அடிக்கலாம். அதுபோல, விராட் கோலியை விட அதிக சதங்களையும் அடிக்கலாம். ஆனால் 3 ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த தோனியின் கேப்டன்சி சாதனையை வேறு யாராலும் இனி எப்போதும் முறியடிக்க முடியாது என்று நினைப்பதாக கம்பீர் கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 71 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, இன்னும் அதிகமாக அடிப்பார். ஆனால் இந்த சாதனைகளை எல்லாம் எதிர்காலத்தில் வரும் வீரர்கள் தகர்த்துவிடக்கூடும். ஆனால் 3 ஐசிசி கோப்பைகளையும் வெல்வது சாத்தியமற்றது என்பது கம்பீரின் கருத்து.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 534

    2

    0