நிலைமை மோசமாகிவிட்டது… திடீர் விலகல் : பாஜக மேலிடத்திற்கு குஷ்பு அவசர கடிதம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2024, 2:19 pm

நிலைமை மோசமாகிவிட்டது… திடீர் விலகல் : பாஜக மேலிடத்திற்கு குஷ்பு அவசர கடிதம்!

நடிகையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் குஷ்பு. தற்போது பாஜகவில் செயல்பட்டு வருகிறார். லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் தான் பாஜகவுக்கான தேர்தல் பிரசாரத்தை நிறுத்தி கொள்வதாக நடிகை குஷ்பு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2019ம் ஆண்டில் டெல்லியில் நடந்த விபத்தில் முதுகின் வால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சைகள் தொடர்ந்து வந்தது. தற்போது தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவ குழு அறிவுறுத்தியது.

இருப்பினும் டாக்டரின் அறிவுரையை ஏற்காமல் பாஜக தொண்டராகவும், பிரதமர் மோடியின் ஆதரவாளராகவும் வலி மற்றும் வேதனையை பொருட்படுத்தாமல் என்னால் முடிந்த பிரசாரங்களை செய்தேன்.

தற்போது நிலைமை மோசமாகி விட்டது. பிரச்சனையில் இருந்து விடுபட தேவையான நடவடிக்கைகை எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இது உயிருக்கு அச்சுறுத்தலான சிகிச்சை முறையல்ல. இது எனது நல்ல எதிர்க்காலத்துக்கான சிகிச்சை முறை. இதனால் தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 282

    1

    0