சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்.. பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு : சபாநாயகர் இருக்கை முன் அதிமுகவினர் தர்ணா!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2022, 10:40 am

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது.

இதனால், நேற்றைய சட்டசபை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆனால் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார்.

அவர் எதிர்கட்ச்சி துணைத் தலைவர் இருக்கையில் அமந்ர்திருந்தார். இந்நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு தற்போது வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்து சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்தனர். அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து எதிர்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பாக பேசினர்.

இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க ஓ. பன்னீர் செல்வம் வந்தார். அவர் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் எடப்பாடி பழனிசாமி அருகில் அமர்ந்தார். இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அவர்கள் அவர்களிடம் உங்களுக்காக நேரம் தருகிறேன் கேள்வி நேரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள் எனக் கூறினார். ஆனால் அதை ஏற்காத அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி அதிமுகவினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுக உறுப்பினர்களை பேரவையில் இருந்து வெளியேற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…