எங்க எவ்ளோ சொத்து இருக்குனு ஜெகத்ரட்சகனுக்கே தெரியாது… திமுக எம்பியை சிக்க வைத்த அமைச்சரின் பேச்சு!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2023, 11:12 am

எங்க எவ்ளோ சொத்து இருக்குனு ஜெகத்ரட்சகனுக்கே தெரியாது… திமுக எம்பியை சிக்கி வைத்த அமைச்சரின் பேச்சு!!!

தமிழகம் முழுவதும் 1.06 கோடி பெண்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்றுமுன் தினம் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.

மற்ற இடங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்தனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

அவர் பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை கையேடுகளையும் வழங்கினார். இந்த மாவட்டத்தில் மாதந்தோறும 2170 பெண்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும்.

இதற்காக ஏடிஎம் கார்டுகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை கையேடுகள் வழங்கப்பட்டன. இதில் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி வர்கீஸ், அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் நாசர், துரை சந்திரசேகர், கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். அவர் பேசுகையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு 5 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அவருக்கு எங்கே எவ்வளவு இருக்கிறது என அவருக்கே தெரியாது என பேசினார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சொந்த கட்சியை சேர்ந்த எம்பி ஜெகத்ரட்சகனின் சொத்துகள் குறித்து பொதுவெளியில் அமைச்சர் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் மீண்டும் விசாரணைக்குள்படுத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் காந்தி பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • 500 crore collection news all are fake said by sundar c 500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்