விருதுநகர் சம்பவம்தான் கடைசியா இருக்கணும்… ஆனா அதுக்கு அரசு இத செய்யணும் : கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த அண்ணாமலை!!
Author: Udayachandran RadhaKrishnan22 March 2022, 9:34 pm
விருதுநகர் மாவட்டம் கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்த 22 வயது பெண்ணை, திமுக இளைஞரணி நிர்வாகியான ஹரிஹரன் (27) என்பவர் காதலித்து வந்தார். இவருக்கு சொந்தமான பெத்தனாட்சி நகரில் இருக்கும் மருந்து குடோனில் அந்தப் பெண்ணுடம் ஹரிஹரன் உல்லாசத்தை அனுபவித்துள்ளார்.
இதனை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோவும் எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி அடிக்கடி மிரட்டி, பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.பின்னர், அந்த வீடியோவை தனது நண்பர்களான திமுக இளைஞரணி அமைப்பாளரான ஜுனைத் அகமது (27), மாடசாமி (37), பிரவீன் (22) மற்றும் 4 மைனர் பசங்களுக்கும் அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோவை வைத்து இவர்களும் அந்தப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து வந்துள்ளனர். பின்னர், இந்த தகவல் வெளியே கசிந்த நிலையில், திமுக நிர்வாகிகள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி சம்பவத்தை மிஞ்சிய இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில ஈடுபட்ட ஜுமைத்கான் என்பவனை திமுக தலைமை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி கூறியுள்ளார்.
இந்த நிலையில் விருதுநகர் சம்பவத்தை கண்டித்து 24ஆம் தேதி காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தினமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விருதுநகரிலே 24ஆம் தேதி காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெறு என தெரிவித்துள்ளார். 22 வயது நம் சகோதரியின் மீது விருதுநகரிலே நடத்தப்பட்ட கூட்டு பலாத்காரம் நம்முடைய நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது!
தமிழகஅரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழகத்தில் நடந்த கடைசி பாலியல் வன்கொடுமை ஆக இது இருக்கும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.