வஃபு வாரிய சட்ட மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் : திமுக கூட்டணி கட்சி தலைவர் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2024, 3:12 pm

விழுப்புரம் அருகேயுள்ள தென்றல் நகரில் செய்தியாளர்களை சந்தித்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது கைது செய்யப்படுவது சிந்து பாத் கதை போல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாகப்பட்டினம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் மீனவர்களின் படகுகள் வலைகளை சேதப்படுத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் பிரச்சனை தீர்க்கபப்டுமென கூறினார்கள் ஆனால் அதன் மீதான நடவடிக்கை எடுக்கவில்லை நிரந்தர தீர்வு கான ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜகவின் கொள்கையும் திமுகவின் கொள்கையும் நேர் முரனாது இரு கட்சிகள் இணைந்து செயல்படுவது சாத்தியமல்ல

ஜனநாயக நாட்டில் கட்சியை தொடங்கியுள்ள சகோதரர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு பாஜக கூட்டணியிலுள்ள கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சட்டதிருத்த மசோதாவை எதிர்ப்போம் சிறுபான்மையின ர் மக்களோடு என்றும் இருபோம் என தமிழக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார் இந்த சட்டமசோதா வரலாறு என்ற குப்பை தொட்டியில் வீசப்படும் என ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 841

    0

    0