சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டாஸ்.. இனி ஒரு வருடம் வெளியே வர முடியாது?!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2024, 4:15 pm
Quick Share

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டாஸ்.. இனி ஒரு வருடம் வெளியே வர முடியாது?!!

காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார்.

பெண் போலீஸ் குறித்த அவதூறு பேச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள யூ டியுபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தமிழக அரசு , முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, முதல்வர் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சித்து வீடியோ பதிவு செய்து வந்த சவுக்குசங்கர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சவுக்கு சங்கர் ஒரு வருடம் வெளியே வர முடியாது.

ரெட் பிக்ஸ் யு-டியூப் சேனலில் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதுாறு கருத்துகளை தெரிவித்துள்ளார் என சேலம் மாநகர போலீசின், சோஷியல் மீடியா பிரிவு எஸ்.ஐ., கீதா, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அவதுாறு பரப்புதல், பணிபுரிய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி தவறான கருத்துகளை வெளியிடுதல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில், சங்கர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: எம்ஜிஆர் மாதிரி விஜய்… அந்த மனசு இருக்கே : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் ட்விஸ்ட்!!

இந்நிலையில், பெண் போலீஸ் குறித்த அவதூறு பேச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள யூ டியுபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீ்ப்ராய் ரத்தோர் பிறப்பித்துள்ளார்.

குண்டர் சட்ட நடவடிக்கைகான ஆவணங்கள் கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் சென்னை போலீசார் ஒப்படைத்தனர். சவுக்கு சங்கர் ஒரு வருடம் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 276

    0

    0