பணிக்கு வந்த இளம்பெண் சித்ரவதை.. எனக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. ஜகா வாங்கிய திமுக எம்எல்ஏ கருணாநிதி!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2024, 7:27 pm

பணிக்கு வந்த இளம்பெண் சித்ரவதை.. எனக்கும் என் மகனுக்கு எந்த சம்பந்தமுமில்லை.. ஜகா வாங்கிய திமுக எம்எல்ஏ கருணாநிதி!

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணன் தனது வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக எழுந்த புகார் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

எம்எல்ஏ மகன் மற்றும் அவரது மருமகள் இருவரும் அடித்து, சூடு வைத்து துன்புறுத்துவதாகவும், வேலையை விட்டு செல்வதாக கூறினாலும், கட்டாயப்படுத்தி வேலையில் அமரவைத்ததாகவும், பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இது குறித்து அப்பெண் வீடியோவில் கூறுகையில், “என்னை அடித்து துன்புறுத்தினார்கள். செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டார்கள்” என்று கூறி உடலில் ஏற்பட்டுள்ள காயத்தை காண்பித்தார். இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக எம்எல்ஏ கருணாநிதி விளக்கமளித்திருக்கிறார்.

“என் மகனுக்கு 7 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகிவிட்டது. அவர் அவரது குடும்பத்துடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். நான் வேறு பகுதியில் வசிக்கிறேன். அவர்கள் எப்போதாவது இங்கு வருவார்கள். நானும் எப்போதாவது அங்கு செல்வேன். அங்கு நடந்தது என்னவென்ற முழு விவரம்கூட எனக்குத் தெரியாது. நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். நான் இதில் ஏதும் தலையிடவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 381

    0

    0