காதலியை பார்க்க கல்லூரி விடுதிக்கு மாறுவேடத்தில் சென்ற இளைஞர்.. நொடியில் நடந்த டுவிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2024, 11:55 am

காதலியை பார்க்க மாறுவேடத்தில் கல்லூரி விடுதிக்கு சென்ற இளைஞருக்கு நடந்த ஷாக் சம்பவம்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தனியார் மருத்துவக் கல்விக் கல்லூரியின் மகளிர் விடுதியில் காதலியை சந்திக்க முயன்ற காதலன் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் சமையல் கலைஞராக பெங்களூரில் வேலைவாய்ப்பு பெற்று பணி புரிந்து வருகிறார்.

மேலும் படிக்க: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை… கருவூல அதிகாரி கைது : கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

இரண்டு வருடங்களுக்கு முன் கேரளாவில் படிக்கும் போது இருவரும் காதலித்தனர். இந்நிலையில் தன் காதலியை சந்திக்க பெங்களூருவில் இருந்து குப்பம் வந்த இளைஞர் பின்னர் பர்தா அணிந்து கொண்டு காதலியை சந்திக்க விடுதிக்குள் சென்றார்.

அந்த இளைஞரின் நடத்தையில் சந்தேகமடைந்த கல்லூரி ஊழியர்கள் சோதனை மேற்கொண்டு அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து கல்லூரி துணை முதல்வர் அருண்குமார் அளித்த புகாரின் பேரில், குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலியை பார்க்க வந்த காதலனை போலீசார் அழைத்து சென்ற சம்பவம் கல்லூரி விடுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • lokesh kanagaraj movie actor sri present fitness photo shocking fans லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…