பாம்பு கடிக்கு ஆளான இளைஞர்.. கங்கை நதியில் கட்டி வைத்த உறவினர்கள்.. முடிவில் TWIST : ஷாக் VIDEO!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2024, 2:49 pm

பாம்பு கடிக்கு ஆளான இளைஞர்.. கங்கை நதியில் கட்டி வைத்த உறவினர்கள்.. முடிவில் TWIST : ஷாக் VIDEO!

உத்தரபிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.

தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26-ந்தேதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். வாக்களித்ததற்கு பிறகு வயல்வெளிக்கு சென்றபோது பாம்பு கடித்துள்ளது.

மேலும் படிக்க: 300 பெண்களுடன் உல்லாசம்.. லீக்கான VIDEO.. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

இதையடுத்து உறவினர்கள் சிலர் முதலில் அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். ஆனால் மருத்துவத்தால் சரி ஆகாது, கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்று சிலர் கூற மூடநம்பிக்கையால் கயிறு கட்டி இரண்டு தினங்களாக மோகித்தின் உடலை கங்கை நதியில் போட்டு வைத்துள்ளனர்.

ஆனால் இந்த மூடநம்பிக்கை எதுவும் அந்த வாலிபரை காப்பாற்றவில்லை. மாறாக பாம்பு விஷம் உடலில் ஏறி பரிதாபமாக அந்த வாலிபர் உயிரிழந்துள்ளார். உயிர் இருக்கிறதா என கூட சோதிக்காமல் நதியிலேயே போட்டு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ