நாங்க 240 பேர் இருக்கோம்.. நாடாளுமன்றத்துக்குள்ள போய் கலாட்டா செய்வோம் : காங்., எம்பி பேச்சால் சலசலப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2024, 2:55 pm
sasi
Quick Share

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுவாயல் கவரப்பேட்டை பெத்திகுப்பம் பகுதியில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தமிழகத்தில் அதிக அளவு 5, 72,155 வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெற்றதை ஒட்டி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் மேல தாளங்கள் முழங்க பல்வேறு பகுதிகளுக்கு சென்று நன்றி தெரிவித்தார்.

அப்போது அவருக்கு பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 100 நாட்கள் பணியில் 400 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் முறையாக பணிகள் வழங்கவில்லை எனவும் மகளிர்க்கு மாதம் 8,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அப்போது நன்றி தெரிவித்து பேசிய சசிகாந்த் செந்தில் பொதுமக்களோடு இருந்து ஐந்து ஆண்டு காலம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்றும் பாராளுமன்றத்தில்
நாங்கள் 240 பேர் செல்கிறோம் கலாட்டா செய்வோம் என்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் நன்றி அறிவிப்பில் பங்கேற்காதது குறித்து பேசுகையில் நன்றி அறிவிப்பிற்கு யாரையும் அழைக்கவில்லை அவர்களாகவே தானாக வந்து சிறப்பாக காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Views: - 115

0

0